முகப்பு
உலகம்

எகிப்து பயணிகள் விமானத்தைக் கடத்தியவர் கைது: பயணிகள், ஊழியர்கள் மீட்பு

எகிப்து நாட்டின் பயணிகள் விமானத்தைக் கடத்திய நபரை சைப்ரஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 29 மார்ச், 2016 at 5:34 PM
பகிர்:

சைப்ரஸ்: எகிப்து நாட்டின் பயணிகள் விமானத்தைக் கடத்திய நபரை சைப்ரஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம். சைப்ரஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகளும், ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த 'எகிப்து ஏர்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது.

Advertisement

இந்த விமானம் சைப்ரஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், கடத்தல்காரரிடம், விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் விமானத்தில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பிறகு, விமானத்தைக் கடத்தியவரிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் சைப்ரஸ் தீவில் குடியேறவும், தனது முன்னாள் மனைவியைப் பார்க்கவும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது.

விமானத்தைக் கடத்தியவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்று தெரிய வந்துள்ளதாகவும், அவர் தனியாக இந்த விமானத்தைக் கடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சைப்ரஸ் போலீஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் வெடிகுண்டுகள் பொருத்திய பெல்டை அணிந்திருப்பதாக விமானிகளை மிரட்டி, விமானத்தைக் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.