கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்து பெரும்பாலான பயணிகள் விடுதலை
கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர்.
கெய்ரோ: கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர்.
எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த 'எகிப்து ஏர்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது.
இந்த விமானம் சைப்ரஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், கடத்தல்காரரிடம், விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் விமானத்தில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டார்.
Advertisement
இதையடுத்து, 4 வெளிநாட்டு பயணிகளைத் தவிர அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
தற்போது விமானத்தில் வெளிநாட்டுப் பயணிகள் 4 பேரும், ஊழியர்கள் 4 பேரும் உள்ளனர்.
விமானத்தைக் கடத்தியவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்று தெரிய வந்துள்ளதாகவும், அவர் தனியாக இந்த விமானத்தைக் கடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் வெடிகுண்டுகள் பொருத்திய பெல்டை அணிந்திருப்பதாக விமானிகளை மிரட்டி, விமானத்தைக் கடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.