முகப்பு
உலகம்

அமெரிக்க அதிபர் - ஜப்பான் பிரதமர் அடுத்த வாரம் சந்திப்பு!

புதிய அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

டோக்கியோ: புதிய அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர்  தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் புதிய அதிபர் டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளார்.

இது குறித்து ஜப்பான் அமைச்சரவை கேபினட் செயலாளர் யோஷிகிடெ சுகா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அபேவும் டிரம்பும் நேற்று தொலைபேசியில் பேசினார்கள். அப்போது இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து உரையாடினர்.

இரண்டு தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு வருகின்ற நவம்பர் 17-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பயந்து இருதரப்பினருக்கு இடையேயான நல்ல நம்பிக்கையை வளர்க்க நல்லதொரு தொடக்கமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →