முகப்பு
உலகம்

இந்தியா - ஜப்பான் இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது!

மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

டோக்கியோ: மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று ஜப்பான் சென்றுள்ளார்.இன்று டோக்கியோவில்   நடைபெற்ற  வருடாந்திர இரு தரப்பு மாநாட்டிற்கு அவரும், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயும் தலைமை  தாங்கினார்கள். தொடர்ந்து அவர்கள் இருவர் முன்னிலையில் இந்தியா,ஜப்பான் இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது  

இது தொடர்பான தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டர்  பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில் அவர் , 'தூய்மையான பசுமையான உலகை உருவாக்கும் ஒப்பந்தம்.பிரதம நரேந்திர மோடி மற்றும் சின்சொ அபே முன்னிலையில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது' என்று பதிவிட்டிருந்தார்.

அணுசக்தி துறையில் இரு நாடுகளும் இணைத்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தவும், நமது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிவில் அணுசக்தி துறையில் இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட சாத்தியங்களையும் இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →