உலகம்

காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு மேற்கே அமைந்துள்ளது தாருல் அமன் பகுதி. இங்கு ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான பகீர் உல் உலூம் மசூதி அமைந்துள்ளது. அங்கு இன்று காலை புகுந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.  

இந்த சம்பவத்தில் 20 பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது காபூலில் இன்று நடைபெறும் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும். முன்னதாக பகிராமி மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு குண்டு வெடிப்பில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

திமுகவினா் நூதனப் போராட்டம்

SCROLL FOR NEXT