டிரம்பின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகம்டிரம்பின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் முறைகேடான வழியில் வாக்களித்துள்ளதாகவும், முறைகேடு நடைபெறாமல் போயிருந்தால், தான் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருப்பேன் என்று டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மேலும், அமெரிக்கா அதிர் தேர்தலில், கிளிண்டன் வெற்றி பெற்ற மாகாணங்களான விர்ஜீனியா, கலிபோர்னியா உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.