முகப்பு
உலகம்

ஜப்பான் நாட்டு பேராசிரியருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஜப்பான் நாட்டின் யோஷிநோரி ஓஹ்சுமி என்ற பேராசிரியர் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 3 அக்டோபர், 2016 at 4:19 PM
பகிர்:


ஸ்டாக்ஹோம்: ஜப்பான் நாட்டின் யோஷிநோரி ஓஹ்சுமி என்ற பேராசிரியர் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

உடல் செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றிய ஆய்வுக்கு  ஜப்பான் நாட்டின் யோஷிநோரி ஓஹ்சுமிக்கு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பானின், டோக்கியோ பல்கலையில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் யோஷிநோரி, ஆட்டோஃபேஜி எனப்படும் செல்லியல் பிரிவில் நிபுணராக விளங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.