உலகம்

தன்னுடைய சொந்த தாத்தாவையே மணந்த பெண்: அமெரிக்காவில் ஒரு அபூர்வ ராகம்!

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தாத்தாவையே, யாரென்று தெரியாமல்  திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

வாஷிங்க்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தாத்தாவையே, யாரென்று தெரியாமல்  திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'ப்ளோரிடா சன் போஸ்ட்'  பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி விபரம் வருமாறு:

அமெரிக்காவை ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த முதியவர்(68) ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் பல லட்ச  ருபாய் பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவகாரத்தாகியுள்ள அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்வது என்று முடிவெடுத்து அதற்கென உள்ள நிறுவனம் ஒன்றை அணுகியிருக்கிறார். அவர்கள் காண்பித்த புகைப்படங்களில் 24 வயது பெண் ஒருத்தியின் புகைப்பபடம் பிடித்திருக்கவே அவளை உணவகம் ஒன்றில் சந்தித்திருக்கிறார். பார்த்த உடனேயே பிடித்துவிட்டதால் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதன் பிறகு ஒரு நாள் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது  கணவனின் ஒரு புகைப்பட ஆல்பம் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவருடைய முதல் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் புகைப்படங்களை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவருடைய முதல் மனைவியின் குழந்தைகளில் ஒருவர்தான் அவளது அப்பா. இதனால் அந்த இளம்பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தனது கணவனிடம் தெரிவித்த பொழுது, அவரது முதல் மனைவிக்கும் அவருக்கும் சண்டைவந்து  அவர் திடீரென்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்  என்றும், அவளைக் கண்டுப்பிடிக்க   தான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததையும் தெரிவித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பிறகு தான் செய்த இரண்டாவது திருமணமும் தோல்வியில்முடிந்தது என்றும், அந்த திருமணம் மூலம் தனக்கு குழந்தைள் பிறந்தன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு லாட்டரியில் ஜாக்பாட் வென்ற  உடனேதான், மீண்டும் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாகவும் அவர் விளக்கினார்.

அதற்கு பிறகு சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் கூறும்பொழுது, 'எங்களது பந்தம் மிகவும் உறுதியானது என்று கருதுகிறேன். இதுபோன்ற எந்த விஷயத்தாலும் எங்களை பிரிக்க முடியாது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT