உலகம்

இருபது லட்சம் மக்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை மிரட்டும் 'மாத்யூ'!

DIN

வாஷிங்க்டன்: அமெரிக்காவின் வடகிழக்கு கட ற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ள 'மாத்யூ' புயலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க,  ஏறக்குறைய இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக அமெரிக்காவின் ஹைதி  கடற்கரை பகுதிகளில் கடுமையான சேதத்தை உண்டாக்கி 22 பேரின் உயிரை பலி வாங்கிய, 'மாத்யூ புயல்' தற்போது அமெரிக்காவின் வடகிழக்கு கட ற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து  ஒன்றரை லட்சம் பேரும், ஜார்ஜியாவிலிருந்து 50000 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாத்யூ புயலானது ப்ளோரிடாவின் அட்லாண்டிக் கடற்கரையோரமாக கரையை கடக்க உள்ளதால்,மேலும் அதிகமான பேரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹேலி  தெரிவித்தார்.  

அவசர காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேமித்து, மாத்யூ புயலை எதிர்கொள்ள  மக்கள்  தயாராகி வரும் வேளையில், இந்த புயலின் தாக்கத்தால் அதிக அளவில் உயிர்சேதம் உண்டாக வாய்ப்பு இருப்பதாக, தேசிய காலநிலை நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

SCROLL FOR NEXT