உலகம்

நான் அதிபரானால் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக விளங்கும்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக விளங்கும்...

DIN

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக விளங்கும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குடியரசுக் கட்சியின் சார்பு அமைப்பான ஹிந்து சங்கம் சார்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியர்களும், அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை அதிவேக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டுகிறேன். இந்தச் சீர்திருத்தங்கள் அமெரிக்காவிலும் தேவைப்படுகின்றன.
பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவின் பங்கு பாராட்டுக்குரியது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலும், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலும் மூர்க்கத்தனமானது. நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நண்பர்களாக உருவெடுக்கும். இதனால் இரு நாடுகளுக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு.
முக்கிய தோழமை நாடான இந்தியாவுடன் ராஜீய, ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. உங்கள் பிரதமர் (மோடி) நாட்டின் வளர்ச்சியை விரும்புபவராக உள்ளார். அதனால்தான் தேவையற்ற வரிகளை நீக்கி, பொருளாதாரத்தை ஆண்டுக்கு 7 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
ஆனால் உண்மையை சொல்லப்போனால், நம் நாட்டின் (அமெரிக்காவின்) பொருளாதாரம் இன்னும் வளர்ச்சியடையவில்லை. அது பூஜ்யமாகவே உள்ளது. எனவே இந்தியாவுடன் சிறந்த நட்புறவை ஏற்படுத்திக் கொள்வோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இங்குள்ள இந்தியர்களும், அமெரிக்கர்களும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

SCROLL FOR NEXT