உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN

ஜப்பானில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 அலகுகளாகப் பதிவானது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஜப்பானின் மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானின் ஹோன்ஷூ தீவில், டொட்டோரி மாவட்டத்தில் மையம் கொண்டுநிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் யுரிஹாமா, குரயோஷி நகரங்களில் மிக அதிகமாக உணரப்பட்டது. நடப்பாண்டில் ஏற்பட்டநிலநடுக்கங்களில் இது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம், உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இருப்பினும், அந்தப் பகுதியில் புல்லட் ரயில் சேவைகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், மின் கட்டமைப்புகள் சேதமடைந்தால் 40 ஆயிரம் வீடுகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது

என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நான்கு புவித்தகடுகள் கூடும் பகுதியில் அமைந்துள்ள ஜப்பானில் ஆண்டுதோறும் ஏராளமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT