உலகம்

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவி பலி

அமெரிக்கப் பள்ளியில் மாணவி ஒருவர், சக மாணவியை துப்பாக்கியால் சுட்ட பின்னர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

DIN

அமெரிக்கப் பள்ளியில் மாணவி ஒருவர், சக மாணவியை துப்பாக்கியால் சுட்ட பின்னர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து காவல் துறை அதிகாரி ரோனி டாட்சன் கூறியதாவது:
மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் அல்பைன் உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அந்தப் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவி, கழிப்பறைக்கு வெளியே நின்றிருந்த சக மாணவியை நோக்கி ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட மற்றவர்கள் ஓடிவந்து காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு, அந்த மாணவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், துப்பாக்கியால் சுட்ட மாணவி குற்ற உணர்ச்சியால் மனம் வெதும்பி, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பலியானார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

கபாலீசுவரா் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

புழல் அருகே மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்

டிஜிபி வினித் தேவ் வான்கடே பணியிட மாற்றம்!

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

SCROLL FOR NEXT