முகப்பு
உலகம்

ஈராக்: ராணுவத் தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி! 

ஈராக்கின் வடமேற்கு பகுதியில் சிரிய நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், ஈராக் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:11 PM
பகிர்:

பாக்தாத்: ஈராக்கின் வடமேற்கு பகுதியில் சிரிய நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், ஈராக் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது.    

சிரியா மற்றும் ஈராக்கில் ஊடுருவியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் நாள்தோறும் அழிவுச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக இரு நாட்டு ராணுவங்களும் முழு வீச்சில் உலக நாடுகளின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈராக்கின் மொசூல் நகரையும், அதனை சுற்றி உள்ள பகுதியையும் முற்றிலுமாக மீட்கும் பணியில் ஈராக் ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் சிரியா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஈராக்கின் வடமேற்கு எல்லையில் உள்ள பாஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடி வான்வழி தாக்குல்களில் ஈராக் படை நேற்று இறங்கியது. இதில் 150 முதல் 200 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட் டிருக்கலாம் என்று அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.