உலகம்

கொலம்பியாவில் கடும் மழையின் காரணமாக நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் பலி; 200 பேர் காயம்

புட்டுமேயோ(கொலம்பியா): கொலம்பியாவில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ..

DIN

புட்டுமேயோ(கொலம்பியா): கொலம்பியாவில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர்பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கொலம்பியா நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது.  இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  கரையை உடைத்து வெளியேறிய வெள்ள நீரானது சேற்றுடன் சேர்ந்து வீடுகளை நிறைத்தது. இதன் காரணமாக உண்டான நிலச்சரிவின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 200 பேர் காயமடைந்துள்ளனர்.  பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை.

இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் பெரிய ஆறான மொகோவா ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தினால் புட்டுமேயோ மாகாணத்தின் மொகோவா நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் கிடைக்கவில்லை. காயமடைந்தவர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மேனுவேல் சான்டோஸ் மொகேவா பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT