உலகம்

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீஃப் மனைவி வேட்புமனு தாக்கல்

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து லாகூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட அவரது மனைவி கல்ஸþம் ஷெரீஃப் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஊழல் புகார் விசாரணை அறிக்கை அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். தனது இளைய சகோதரர் ஷாபாஸ் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று நவாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
ஆனால் ஷாபாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டிய கட்டாயம் எழுந்தது. இடைக்காலப் பிரதமராக ஷாஹித் காகான் அப்பாஸி பிரதமராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், நவாஸ் உறுப்பினராக இருந்த லாகூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. செப். 17}ஆம் தேதி நடைபெறவுள்ள லாகூர் இடைத்தேர்தலில் ஷாபாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட நவாஸின் மனைவி கல்ஸþம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியுள்ளவர் கல்ஸþம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்}நவாஸ் கட்சியின் தலைவராக 1999}ஆம் ஆண்டு முதல் 2002}ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ள ஷாபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பது கல்ஸþமுக்கும் நவாஸ் மகள் மரியமுக்கும் ஏற்புடையதாக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நவாஸ் சொந்தத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் கல்ஸþம் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் கல்ஸþம் வெற்றி பெற்றால் பிரதமராகப் பொறுப்பேற்பாரா என்று பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT