உலகம்

ஸ்பெயின் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

DIN

ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் கேம்ப்ரில்ஸ் நகர்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

ஸ்பெயினின் கேம்ப்ரில்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை காலை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பொருத்திய சட்டைகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன் ஒரு பயங்கரவாதி வீதியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார். ஆனால் அதில் எவரும் காயமடையவில்லை. இந்நிலையில், அந்த பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் என்று ஐ.எஸ். பயங்கரவாதக் குழு சார்பிலான வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்ப்ரில்ஸ் சம்பவத்தில் மொத்தம் 12 பேர் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். அந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவர் மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நெரிசல் நிறைந்த வீதியில் கூட்டத்தினரிடையே கடந்த வியாழக்கிழமை வாகனத்தை மர்ம நபர் ஓட்டி வந்து நிகழ்த்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் மேலும் நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்பெயின் காவல் துறையினர் அந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியுள்ளனர்.
அந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் ஏற்கெனவே பொறுபேற்றுள்ளது.
கடந்த வாரம் பார்சிலோனா அருகே ஒரு வீட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வெடிபொருள்களை சரி வரக் கையாளாததால் அது வீட்டிலேயே வெடித்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
அந்த வீட்டிலிருந்து ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடி விபத்தில் பலியானவர்களைக் குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பார்சிலோனா தாக்குதலும் கேம்ப்ரில்ஸ் சம்பவமும் நடந்தது.
பார்சிலோனாவில்வாகனத்தை ஓட்டி வந்து தாக்குதல் நிகழ்த்திய மர்ம நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார். மர்ம நபரைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்கிறது. ஸ்பெயின் முழுவதும் அதிகபட்ச எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT