இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் சாவு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதன்காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் வரை படுகாமடைந்துள்ளனர்.
முன்னதாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 6.5 ஆகப் பதிவானது.
இதில், 80 வயது மதிக்கத்தக்க பெண், 62 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகியோர் நிலநடுக்கத்தின் காரணமாக வீட்டினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற முயன்ற போது சிக்கி உயிரிழந்தார்.
Advertisement
இதையடுத்து அந்நாட்டின் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலநடுக்கானது ஜாவா தீவுகளின் மேற்கு பகுதியில் உள்ள டாஸிக்மாலயா என்ற நகரத்தில் இருந்து 92 கி.மீ. ஆழத்திலும், 52 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.