மணிலா: 251 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துகுள்ளானதில் நால்வர் பலியாகி உள்ளனர். மீதி பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி நகரான 'ரீல்' பகுதியில் இருந்து போலிலோ தீவுக்கு சுற்றுலாப் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மோசமான வானிலை காரணமாக படகு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியது.
இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக பணிகளை விரைவு படுத்த இயலவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.