உலகம்

இனி சீனாவுக்கு போக வேண்டுமென்றால் விமான நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்! 

DIN

பீஜிங்: இனி சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டுமென்று அந்நாட்டின் பொது பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக பொது பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

இந்த வருடம் முழுவதும் நாடு முழுவதும் நாட்டுக்கு உள்ளே நுழைபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் துறைகளில் இனி கைரேகை பதிவுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக  ரீதியிலான பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள் மற்றும் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்யயப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும் இந்த கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது முதன்முறையாக வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து ஷென்ஸென் விமான நிலையத்தில் அமல் செய்யப்பட உள்ளது. 

இந்த தகவலை சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT