உலகம்

திருநங்கை மாணவர்களுக்கு சலுகை: ஒபாமாவின் ஆணையை ரத்து செய்தார் டிரம்ப்

DIN

அமெரிக்கப் பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் தங்களது பாலியல் அடையாளத்துக்கு ஏற்ப ஆண் - பெண் கழிப்பறைகளையும், பொருள் வைக்கும் அறைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கடந்த ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசாணையை அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதற்கான அறிவிப்பை நீதி மற்றும் கல்வித் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இதுதொடர்பான ஒபாமாவின் ஆணைக்கு எதிர்த்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளதாலும், பாலின அடையாளதுக்கு ஏற்ப மாணவர்களை கழிப்பறைக்குள் அனுமதிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருப்பதாலும் அந்த ஆணை திரும்பப் பெறப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசின் இந்த முடிவுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT