உலகம்

மொசூல் விமான நிலையம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பு

DIN

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மொசூல் நகரை மீட்பதற்காகப் போரிட்டு வரும் அரசுப் படையினர், அந்த நகரின் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தை வியாழக்கிழமை கைப்பற்றினர்.

நகரின் தெற்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அந்த விமான நிலையத்தை மீட்டது, நகரை நோக்கி முன்னேறுவதில் அரசுப் படையினருக்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலை புதன்கிழமை தொடங்கிய அரசுப் படையினருக்கு பக்கபலமாக அமெரிக்க - இராக் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் அகியவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டன.
விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து குறைந்த அளவே எதிர்ப்பு வந்த நிலையில், வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் உள்துறை அமைச்சகத்தின் அதிவிரைவுப் படையினரும், அவர்களைத் தொடர்ந்து மத்திய போலீஸாரும் பயங்கரவாதிகளை வடக்கு திசையில் விரட்டியடித்துவிட்டு விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்.
இதுகுறித்து அதிவிரைவுப் படை தளபதி ஹிஷம் அப்துல் காதம் கூறியதாவது:
எங்களது படையினர் மொசூல் விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டது.
ராணுவப் பொறியாளர்கள் விமான நிலையப் பாதையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
விமான நிலையத்திலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதிக எதிர்ப்பின்றி வெளியேறினாலும், தொலைவில் மறைந்திருந்து சுடலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் சுற்றிலுமுள்ள பகுதிகளில் சோதனை நடத்தியவாறே விமான நிலையத்தை நோக்கி எச்சரிக்கையுடன் முன்னேறிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளிடமிருந்து எதிர் தாக்குதல் வராத நிலையிலும், அருகிலுள்ள கட்டடங்கள் மீது பாதுகாப்புப் படையினர் குண்டுமழை பொழிந்து தரைமட்டமாக்கினர்.
மொசூல் நகரின் மேற்குப் பகுதியில் 7.5 லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், நகரில் சுமார் 2,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிரியா பேச்சுவார்த்தையில் எந்தத் திருப்பமும் ஏற்படாது


சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஜெனீவாவில் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையைக் குலைக்கும் ஏராளமான சிக்கல்கள் எப்போதும் போல் இப்போதும் உள்ளன. எனவே, இந்தப் பேச்சுவார்த்தையில் பெரிய திருப்பம் எதுவும் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

- ஸ்டாஃபன் மிஸ்துரா, சிரியாவுக்கான ஐ.நா, சிறப்பத் தூதர்

சீனா செயற்கைத் தீவு அமைத்தால் உறவு முறியும்

தென் சீனக் கடலில் நாங்கள் உரிமை கொண்டாடி வரும் மணல்திட்டில் செயற்கைத் தீவை உருவாக்கும் கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டால், அந்த நாட்டுடனான எங்கள் நட்புறவு மோசமடையும். அதனை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேம்.

- பெர்ஃபெக்டோ யாசோ, பிலிப்பின்ஸ் வெளியுறவுத் துறைச் செயலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT