உலகம்

பாகிஸ்தான் டு சவுதி அரேபியா: விமானத்தில் நின்று கொண்டே பயணித்த பயணிகள்! 

DIN

கராச்சி: கடந்த மாதம் பாகிஸ்தானில் இருந்து சவூதி அரேபியாவின் மதீனாவுக்கு பயணித்த பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் நின்று கொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் கராச்சியில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ)  விமானம் ஒன்று சென்றது.அந்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பயணிகலால் நிரம்பி விட்டது.

ஆனால் அதன் பிறகு ஏழு பயணிகள் விமானத்தின் இருக்கைகளுக்கு நடுவே இருக்கக் கூடிய நடக்கும் வழியில் உள்ள இடத்தில் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று பிஐஏவின் செய்தி தொடர்பாளர் அதன் பிறகு பிரபல செய்தி நிறுவனமான பிபிசியிடம் தெரிவித்து இருந்தார்.

முதலில் இது தொடர்பான விவரங்களை முதலில் பாகிஸ்தானிய செய்தித்தாளான டான்(Dawn) வெளியிட்டது. அந்த செய்தித்தாளில் குறிப்பிட்ட ஏழு பயணிகளுக்கும் கையால் எழுதப்பட்ட பயண அனுமதிச் சீட்டைவிமான ஊழியர்கள்  கொடுத்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள  நிலையில் தங்களது விமானத்தில் எப்படி ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக பிஐஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT