உலகம்

பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது, லாகூரில் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

DIN

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது, லாகூரில் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்பேரில், செளபுர்ஜி மசூதியில் இருந்த ஹபீஸ் சயீதை லாகூர் போலீஸார் திங்கள்கிழமை மாலை சுற்றி வளைத்தனர்.
ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், ஹஃபீஸ் சயீதுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அதையடுத்து, ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஜமாத்-உத்-தாவா அமைப்புக்குத் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

SCROLL FOR NEXT