உலகம்

கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தங்கையை கழுத்தை நெரித்துக் கொன்ற சிறுவன்!

IANS

லாகூர்: உன் கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தனது தங்கையை, பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் 'டான்' செய்தித்தாளில் வெளிவந்துள்ள விபரம் வருமாறு:

கடந்த வெள்ளியன்று ஒன்பது வயது சிறுமி இமான் தன்வீர் லாகூரின் ஷாலிமர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். கழுத்தினை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.இது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரனை நடத்திய போலீசார்,சிறுமியின் சித்தியான  சபாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் தொடர் விசாரணையின் முடிவில் இமானின் சகோதரனான 11 வயது அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டான். இந்த கைது தொடர்பாக காவால் துறை அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், 'ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அப்துல் மற்றும் இமான் ஆகிய இருவரும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.

பாட்டி இல்லாத சமயத்தில் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். அப்பொழுது ரகுமானின் கையெழுத்து மோசமாக உள்ளதாக. இமான் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுமான், அருகிலிருந்த துப்பட்டா ஒன்றினைக் கொண்டு, இமானின் கழுத்தினை நெரித்துக் கொன்றுள்ளான்.பின்னர் விசாரணையின் பொழுது அவன் உண்மையினை ஒப்புக் கொண்டான்' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT