உலகம்

இரண்டரை வருடங்களில் 465 பேருக்கு தூக்கு: பாகிஸ்தானின் 'கொடூர' சாதனை!

IANS

லாகூர்: பாகிஸ்தானில் மரண தண்டனைக்கு எதிரான தடை கடந்த 2014-டிசம்பரில் விலக்கிக் கொல்லப்பட்ட பிறகு, கடந்த இரண்டரை வருடங்களில் 465 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் புரஜெக்ட் பாகிஸ்தான்' என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மரண தண்டனை தடை நீக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனைகள் குறித்து இந்த அமைப்பு ஒரு ஆய்வினை மேற்க்கொண்டு அதன் முடிவுகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் 465 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக 'உலகில் அதிக அளவில் மரண தணடனைகளை நிறைவேற்றும் நாடுகள்'   பட்டியலில், சீனா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஐந்தாவதாக பாகிஸ்தான் இணைந்துள்ளது.

ஆனால் இத்தனை அதிகமான தூக்குத் தண்டனைகள் காரணமாக பாகிஸ்தானில் தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விதமான குற்றங்களும் குறையவில்லை. பெரும்பாலான நேரங்களில் மரண தணடனையானது ஒரு அரசியல் பழி வாங்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பெரும்பாலான சமயங்களில் அளவுக்கு அதிகமா நிரம்பி வழியும் சிறைக்கூடங்களில், ஆட்குறைப்பு செய்யம் ஒரு வழியாக கூட தூக்குத் தணடனை பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.

பெரும்பாலான மரண தணடனைத் தீர்ப்புகள் சிந்து மாகாணத்தின் கைபர் பக்துன்க்வா பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றங்களில் முடிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வரும் ஜூலை 11-ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் 'சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான கூட்டமைப்பு' என்னும் அமைப்பானது, இந்த தூக்குத் தண்டனைகள் பற்றி ஆய்வு நடத்த உள்ளது  இதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் முன்பாக, மனித உரிமைகள் தொடர்பாக   பாகிஸ்தான் கொடுத்த உறுதிமொழிகள் விஷயமாக பாகிஸ்தானுக்கு சங்கடமான சூழல் உருவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT