முகப்பு
உலகம்

சீன மொழி கற்கும் பாகிஸ்தான் ஆசிரியர்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பெய்ஜிங் சென்று சீன மொழி கற்கின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சீன தூதரகத்தின் உதவியோடு பாகிஸ்தான் ஆசிரியர்களுக்கு சீன மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த 15 நாள் பயிற்சி வகுப்பானது 2017-ம் ஆண்டுக்கான ஆசிரியிர் பயிற்சி கூட்டமைப்பின் கீழ் சீன அரசாங்கத்தால் நடத்தப்படடு வருகிறது.

இதன்மூலம் சீன மொழியை எளிதில் கற்றுக்கொள்ள வசதியாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் சீன நாட்டின் கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என சீன அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சீன தூதரகத்தின் அதிகாரி சாஹோ லிஜியான் மற்றும் பாகிஸ்தான் உயர்கல்வி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் அர்ஷத் அலி முன்னிலையில் நடந்தது.

இதையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த 26 ஆசிரியைகள் மற்றும் 14 ஆசிரியர்கள் என மொத்தம் 40 பேர் இந்த பயிற்சி வகுப்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் கலந்துகொண்டுள்ளனர். 

கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வகுப்பு மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது.

இதுவரையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 120 ஆசிரியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று சீன மொழியைக் கற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.