உலகம்

நீங்கள் டிவிட்டரில் இருக்கிறீர்களா? மோடியை அதிர்ச்சியடைய வைத்த பெண் பத்திரிகையாளர்!

IANS

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா): உலக அளவில் அதிகமான பேரால் டிவிட்டரில் பின்தொடரப்படும் தலைவர்களில் இரண்டாவது இடத்திலிருக்கும் இந்திய பிரதமர் மோடியை, நீங்கள் டிவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டு அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி தற்பொழுது மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ரஷ்யா சென்ற அவர், அங்கு ரக்ஷய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்பொழுது இருவரும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கான்ஸ்டான்டின் அரண்மனையில் ரக்ஷய அதிபர் புடின் அமெரிக்காவின் ஏன்.பி.சி தொலைக்காட்சியைச் சேந்த பிரபல பெண் பத்திரிகையாளர் மேகன் கெல்லிக்கு பேட்டியளிப்பதாக திட்டம் இருந்தது. அப்பொழுது மேகன் கெல்லி இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

பொதுவாகவே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆர்வமாக செய்லபடும் பிரதமர் மோடி, அன்று காலை டிவிட்டரில் கையில் குடையுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மேகன் கெல்லி நின்று கொண்டிருப்பது போல் வெளியிட்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, தான் அதை பார்த்திருப்பதாக கூறினார். அதை ஆச்சர்யத்துடன் எதிர்கொண்ட  கெல்லி, 'நிஜமாவா? நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் டிவிட்டரில் இருக்கிறீர்களா?' என்று வினவினார். இதனால் ஒரு நொடி அதிர்ச்சியான மோடி பின்னர் சமாளித்துக் கொண்டு, ஆமாம்  என்பது போல் தலையாட்டினார்.   

இன்று காலை ஏன்.பி.சி தொலைக்காட்சியில் புடினுடனான பேட்டிக்கான முன்னோட்ட காணொளி வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த இந்த் காட்சி சமூக  வலைத்தளங்களில்  மேகன் கெல்லிக்கு கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. தனக்கான முன் தயாரிப்பினை சரியாக அவர் செய்யவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர். 

உலக அளவில் அதிகமான பேரால் டிவிட்டரில் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்களில்  30.3 மில்லியன் பேருடன் மோடி இரண்டாவ்து இடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 31.2 மில்லியன் பேருடன் முதலிடத்திலிருக்கிறார்.

மொத்தமாக டிவிட்டரில் பின்தொடரப்படும் நபர்களில் மோடி 35 –ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT