உலகம்

பிலிப்பைன்ஸ் நட்சத்திர விடுதியில் மர்ம நபர் தாக்குதல்: 34 பேர் பலி

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் காசினோவில் உள்ள சுற்றுலா நட்சத்திர விடுதியில் (ரிசார்ட்ஸ்) ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று

DIN

மணிலா: பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் காசினோவில் உள்ள சுற்றுலா நட்சத்திர விடுதியில் (ரிசார்ட்ஸ்) ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 54க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளனர் என்றும், அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் உள்ள சுற்றுலா நட்சத்திர விடுதியில் வெள்ளை நிறத்தில், உயரமான மற்றும் ஆங்கிலம் மொழி பேசும் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மர்ம நபரை கைது செய்ய முயன்ற போலீஸாருடன் அவன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டான்.

இதையடுத்து விடுதியில் பெரும் ஓசையுடன் குண்டுகள் தெறித்தன. மக்கள் பீதியடைந்து தங்கள் அறைகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் காயம் அடைந்தனர்.

பல மணி நேரம் நீடித்த இந்த நிலைமையை அடுத்து தாக்கியவன் தப்பிச் சென்று விட்டான்.

ஆனால், யாரும் துப்பாக்கியால் சுடப்படவில்லை. தாக்குதல் நடத்தியவன் கொள்ளையடிக்க வந்தவனா, தீவிரவாதியா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மணிலாவில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல் நடந்து வருவதாகவும், சுற்றுலா பயணிகளை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 54க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT