உலகம்

என்னதான் இருக்கு இந்த படத்தில்? ஐந்து லட்சம் பேரை குழப்பிய ஒரு ‘வைரல்’ போட்டோ!

DIN

வாஷிங்டன்: பிரபலமான இணைய புகைப்பட பகிர்வு தளமான 'இம்குரில்' பகிரப்பட்ட ஒரு புகைப்படமானது, அதன் விநோத தன்மைக்காக ஐந்து லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ளது.  

'இம்குர்' என்பது உலக அளவில் பிரபலமான ஒரு இணைய புகைப்பட பகிர்வு தளம். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான புகைப்படங்கள் பகிரப்படும். அப்படி சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு புகைப்படமானது அதன் விநோத தன்மைக்காக ஐந்து லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ளது.

what047 என்னும்  பெயர் கொண்ட ஒரு பயனாளர் அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.அத்துடன் 'இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு எனக்கு இத்தனை நேரம் பிடித்தது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உடனே அதனை அதிக அளவிலான பயனாளர்கள் பார்க்கத் தொடங்கினார்கள். அது மட்டும் அல்ல, அது  தொடர்பான கருத்துக்களும், விவாதமும் புகைப்படத்திற்கு கீழே உள்ள கருத்துரைகள் பகுதியில் குவியத் தொடங்கின. இவ்வாறு தொடர்ந்து ஐந்து லட்சம் பேரால் அந்த புகைப்படம் பார்க்கப்பட்டுள்ளது.

இதுதான் அந்த புகைப்படம். முதலில் பார்ப்பதற்கு நான்கு பெண்கள் ஒரு சுற்றுலா தளத்தில் சூரிய ஒளியில் நின்று போஸ் குடுப்பது போல் உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் ஒரு வித்தியாசம் புலப்படும்.

அதாவது புகைப்படத்தின் பின்னணியில் நடந்து செல்லும் ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தலை உள்ளதையும், மற்றும் தலையில் ஒரு நியான் பட்டையை அணிந்திருப்பதையும் அறியலாம். குழுவில் பகிர்ந்துள்ள ஒருவர் 'போட்டோஷாப்' மென்பொருள் மூலம் இந்த வேடிக்கையை செய்துள்ளார்.

முதலில் பார்க்கும் யாருமே பெண்களை கவனிப்பார்களே அன்றி, இந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்தப் படம் வைரலாக பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT