உலகம்

மொசூல் நகரில் 1 லட்சம் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்: ஐ.நா தகவல்

DIN

சுமார் 1,00,000 குழந்தைகள் ஐ எஸ் கட்டுப்பாட்டிலுள்ள வட ஈராக் நகரான மொசூல் நகரில் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.

மொசூல் நகரில் குழந்தைகள் தீவிரவாதிகளால் மனிதக் கேடயமாக பயன்படுத்தக்கூடிய சாத்தியமிருப்பதாகவும், கடும் சண்டைக்கு இடையில் பலர் சிக்கவும், சில நேரங்களில் போரிடவும் கூட நேரிடலாம் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யூனிசெஃப்) அறிக்கை கூறுகிறது. போரில் மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்படுவதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.

மேலும், மேற்கு மொசூலில் கொல்லப்பட்ட பல குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பற்றிய ஆபத்தான அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்றும் சண்டையில் இருந்து தப்பி ஓட முயன்றபோது சிலர் கொல்லப்பட்டதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஈராக் அரசாங்கப் படைகள் ஜனவரி மாதம் கிழக்கு மொசூலை மீண்டும் கைப்பற்றி நகரின் மேற்குப் பகுதியிலுள்ள மீதமுள்ள இஸ்லாமிய அரசைக் கைப்பற்றுவதற்காக ஒரு புதிய முயற்சியைத் மே 27 இல் தொடங்கியது.

கடந்த அக்டோபரில் மொசூல் நகரின் மேற்குப் பகுதியில் தாக்குதலை துவங்கிய ஈராக்கிய படைகளுக்கு அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச விமான மற்றும் தரைப்படைகள் உதவின.

போருக்கு முன்னதான மக்கள்தொகையான 7,00,000 பேரில் மூன்றில் ஒரு பகுதியினர் நகரை விட்டு வெளியேறி நண்பர்களுடனும், உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். பலர் அகதிகளாக மாறியுள்ளனர்.  

போர் நடக்கும் பகுதியில் ஏராளமானோர் இறந்து கிடப்பதாகவும், அதில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடிமக்கள் மற்றும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் நீர் அமைப்புகள் உட்பட பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," யுனிசெஃப் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT