உலகம்

இத்தாலிக்குள் அகதிகளைக் கடத்தி வர முயன்ற 15 பேர் கைது

DIN

இத்தாலிக்குள் சட்டவிரோதமாக அகதிகளைக் கடத்தி வர முயன்ற 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
லிபியாவிலிருந்து சட்டவிரோதமாக அதிக அளவில் அகதிகளை இத்தாலிக்கு கடத்தி வரத் திட்டமிட்ட 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அந்த அகதிகள் இடையே, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக துனீசிய காவல் துறையினரால் தேடப்பட்டு வருவோரையும் சேர்த்து இத்தாலிக்கு அழைத்து வர அவர்கள் திட்டமிட்டனர்.
துனீசியாவின் எல்லையிலிருந்து "சொகுசுப் படகில்' அகதிகளை இத்தாலிக்கு அழைத்து வர பயணிகள் ஒவ்வொருவரிடமும் கடத்தல்காரர்கள் ரூ.2.30 லட்சத்தை கட்டணமாகப் பெற்றுள்ளனர்.
இதேபோன்று, வாரமிருமுறை அவர்கள் இத்தாலிக்கு போலி சிகரெட்டுகள் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களில் இத்தாலி மற்றும் துனீசியா நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு முன்னர் அதுபோன்ற சொகுசுப் படகில் வந்த அகதிகள் எவருக்கும் பயங்கரவாதத் தொடர்பு இல்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT