உலகம்

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 5 போலீஸார் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமையகத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ஆஸாதுல்லாஹ் ஷிர்ஸாத் கூறியதாவது:
பக்தியா மாகாண தலைநகர் கார்டெஸில் அமைந்துள்ள போலீஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினர்.
வெடிபொருள் நிரப்பிய காரில் வந்த முதலாவது பயங்கரவாதி போலீஸ் தலைமையகத்தின் நுழைவு வாயிலில் அதனை வெடிக்கச் செய்தார். இதையடுத்து, அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி கண்மூடித்தனமாகச் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நிகழ்த்தினர். அவர்களையும், தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்த வந்த மற்றொரு பயங்கரவாதியையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர். 5 பேரில் ஒரு பயங்கரவாதி மட்டும் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மறைந்திருந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறார். அவரை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 5 பொதுமக்களும் அடங்குவர் என்றார் அவர்.
பின்னர் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷபிநுல்லாஹ் முஜாகித் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றதை ஏற்படுத்துவதற்காக தாக்குதல்களை நிகழ்த்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் 'அரபு வசந்தம்' என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தப் போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தனர். அதுமுதல், ஆப்கன் போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் இந்த தாக்குதலுக்கு 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை ராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தினர். இதில், ஆப்கன் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி வரும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT