உலகம்

அளவுக்கு அதிகமான இரைச்சலில் வசிப்போருக்கு அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை: 'ஷாக்' ஆய்வு முடிவுகள்!

IANS

சியோல்: அதிக அளவு இரைச்சல் நிரம்பிய பிராந்தியத்தில் தொடர்ந்து வசிக்க நேருவோருக்கு ஆண் மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் அமைந்துள்ளது சியோல் தேசிய பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் அதிக அளவிலான இரைச்சல் கொண்ட பகுதியில் தொடர்ச்சியாக வசிப்போருக்கு உண்டாக்கும் ஆரோக்கிய குறைபாடுகள் குறித்து ஆய்வு மேகொள்ளப்பட்டது.

இந்த ஆய்வானது 2006-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு எட்டு ஆண்டு காலம் நடைபெற்றது.  இதற்காக 20 முதல் 59 வயது வரை உடைய 2 06,492 பேரிடம்  ஆய்வுக் குழுவினர் சோதனைகளை நடத்தினாரகள். அவர்கள்  எத்தகைய அளவிலான சத்தங்கள் நிரம்பிய பகுதிகளில் வசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட அதிகபட்ச ஒலி அளவானது, தேசிய சத்த தகவல் சேகரிப்பு மையத்திலிருந்து, அவர்களின் வசிப்பிட பின்கோடுகளில் மூலம் கண்டறியப்பட்டது. இறுதியாக அவர்களில் 3,293 பேரிடம் மலட்டுத்தன்மை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.   

பல்வேறு காரணிகளையும் தெளிவாக ஆய்வு செய்த பின்பு, இறுதியாக 55 டெசிபல் அல்லது அதற்கு மேற்பட்ட சத்தங்கள் நிரம்பிய பகுதியில் தொடர்ச்சியாக வாழ்பவர்களுக்கு, ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது என்பது கண்டறியப்பட்டது.

இந்த விரிவான சோதனையின் முடிவுகள் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான தேசிய இதழில் வெளியிடப்பட்டது. இது குறித்து சியோல் தேசிய பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த ஜின் யங் மின் செய்தியாளர்களிடம் கூறியதாவது  

இரவுகளில் நீங்கள் 55 டெசிபல் அல்லது அதற்கு மேற்பட்ட சத்தங்கள் நிரம்பிய பகுதியில் தொடர்ச்சியாக வாழுமாறு நேர்ந்தால், உங்களுக்கு ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது.

நமது உடல்நலத்தில் உண்டாக்கும் எதிர்பாராத விளைவுகளின் காரணமாக மலட்டுத்தன்மை என்பது தற்பொழுது மிக முக்கியமான ஆரோக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் நமக்கு இயல்பான பிரசவம் மற்றும் குழந்தை பிறப்பு என்பது இயலாததாகி விடும்.

பெண்களிடம் இதற்கு முன்பு மலட்டுத்தன்மை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளும், அதிக அளவு இரைச்சலுக்கும் குழந்தை பிறப்புக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளன. இதன் காரணமாக குறைப்பிரசவம், கருச்சிதைவு மற்றும் தோற்றக் குறைபாடுகள் ஆகியவை ஏற்படுகிறது.

இரைச்சல் காரணமாக இதய நோய் மற்றும் மூளை தொடர்பான கோளாறுகளும் உண்டாகின்றன.     

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT