உலகம்

இந்திய எல்லை அருகே சீனா பீரங்கி சோதனை

DIN

இந்திய எல்லை அருகே தனது புதிய இலகு ரக பீரங்கியை வெடித்து சோதனை செய்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ கியான், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சீன ராணுவம் திபெத்தின் சமவெளிப் பகுதிகளில் பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையே. சீனா உருவாக்கியுள்ள, 35 டன் எடை கொண்ட புதிய இலகு ரக பீரங்கி அந்தப் பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டது என்றார் அவர்.
இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு எதிரானதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, '''புதிய இலகு ரக பீரங்கியின் செயல்திறன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மட்டுமே திபெத் பகுதியில் அந்த பீரங்கியை பரிசோதித்துப் பார்ததோம். மற்றபடி, எந்த நாட்டுக்கும் எதிராக அந்தப் பரிசோதனை நடத்தப்படவில்லை'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT