உலகம்

முகத்தின் சதையை தின்னும் வினோத பாக்டீரியா: கம்போடிய இளம்பெண்னுக்கு நேர்ந்த விபரீதம்!

பல் சிகிச்சையின் போது உருவான பாக்டீரியா தொற்றின் காரணமாக இளம்பெண் ஒருவர் தனது முகச் சதைகளை இழந்து தவிக்கும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நாம்பெண்: பல் சிகிச்சையின் போது உருவான பாக்டீரியா தொற்றின் காரணமாக இளம்பெண் ஒருவர் தனது முகச் சதைகளை இழந்து தவிக்கும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் சுத் ரெட். இவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய  உடைந்த பல் ஒன்றை நீக்குவதற்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். சிறிய அளவிலான சிகிச்சை முறை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.  அதன் பிறகுதான் அவருக்கு நெக்ரோடிஸிங் பசிலிட்டிஸ் என்னும் பாக்டீரியா தாக்குதலின் அறிகுறிகள் தோன்றியுள்ளன.  

முதலில் அவரது தொண்டையில் அந்த பாக்டீரியாவின் பாதிப்பு தெரிய ஆரம்பித்துள்ளது. பின் அதனைத் தொடர்ந்து அவரது ரத்தத்தில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக முகம் முழுவதிலும் பரவத்தொடங்கியுள்ளது. இதன் கொடூர விளைவாக சுத் ரெட்யின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் துவங்கியுள்ளது. அந்த பாக்டீரியாவானது சுத் ரெட் முகத்தில் இருந்த சதைகளை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்னத் துவங்கியுள்ளது.

இந்த  நோயின் தாக்கத்தினால் அவரால் சரிவர எதையும் சாப்பிட இயலாத நிலை. இதன் விளைவாக தற்போது சுத் ரெட் அதிக அளவில் எடை குறைந்து மிகவும் பரிதாப நிலையில் காணப்படுகிறார்.

இந்த வினோத நோய் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் இரண்டு பேர் இறந்து விடுவார்கள். ஆனால் சரியான  சிகிச்சை பெறுவதற்கு சுத் ரெட்டிடம் போதிய அளவு பணம் இல்லை. எனவே யாரேனும் தனக்கு உதவுவார்கள் என்று சுத் ரெட் காத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT