உலகம்

8 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 8 நாடுகளைச் சேர்ந்த 10 விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

DIN

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 8 நாடுகளைச் சேர்ந்த 10 விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிம்ப்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் ஸ்மார்ட்போனை விடப் பெரிய மின்னணு சாதனங்களை பயணிகள் அமர்ந்து பயணிக்கும் பகுதிக்கு எடுத்து வரக்கூடாது.
ஐ-பேட், டேப்லெட், கேமரா, லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ’லக்கேஜ்' பகுதிக்கு அனுப்பிவிட வேண்டியது கட்டாயமாகும்.
கையில் எடுத்துவரக் கூடிய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா வரும் விமானங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் கெய்ரோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, அபுதாபி, துருக்கியின் இஸ்தான்புல், கத்தாரின் தோஹா, ஜோர்டானின் அம்மான், மொராக்கோவின் காசாபிலான்கா, சவூதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத், குவைத்தின் குவைத் சிட்டி ஆகிய 10 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT