முகப்பு
உலகம்

விமானங்களில் லேப்டாப் எடுத்து வர தடை: பிரிட்டன் அறிவிப்பு!

லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களின் உள்ளே வெடிபொருள்களைக் கொண்டு வரக் கூடும் என்பதால் துருக்கி, லெபனான்,

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களின் உள்ளே வெடிபொருள்களைக் கொண்டு வரக் கூடும் என்பதால் துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து எலெக்ட்ரானிக் பொருள்களை எடுத்து வர பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிரிட்டன்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் எகிப்தின் கெய்ரோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, அபுதாபி, துருக்கியின் இஸ்தான்புல், கத்தாரின் தோஹா, ஜோர்டானின் அம்மான், மொராக்கோவின் காசாபிலான்கா, சவூதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத், குவைத்தின் குவைத் சிட்டி ஆகிய 10 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகள், ஐ-பேட், டேப்லெட், கேமரா, லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ’லக்கேஜ்' பகுதிக்கு அனுப்பிவிட வேண்டியது கட்டாயமாகும்.

கையில் எடுத்துவரக் கூடிய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா வரும் விமானங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தைப் பிரிட்டனும் அமல்படுத்தி உள்ளது.

துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், பிரிட்டனுக்கு வரும்போது விமானங்களில் ஐ-பேட், டேப்லெட், கேமரா, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது.

லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களின் உள்ளே வெடிபொருள்களைக் கொண்டு வரக் கூடும் எனக் கருதியே, இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →