உலகம்

உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான சீன ரோபாட்: அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது! 

தினமணி

ஷாங்காய்: உடல் ஊனமுற்றவர்கள் நடக்க உதவும், உடலிலேயே அணிந்து கொள்ளும் படியான சீனத் தயாரிப்பு ரோபாட்டுக்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளன.

சீனாவைச் சேர்ந்த ஆரம்ப நிலை நிறுவனமான 'போரியர் இன்டலிஜென்ஸ்' என்னும் நிறுவனம்தான் இத்தகைய உடலிலேயே அணிந்து கொள்ளும் படியான ரோபாட்டுகளை தயாரிக்க உள்ளது. இந்த ரோபாட்டுக்கு 'தி போரியர் X1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மாதிரி வடிவமானது இந்த மாதத் துவக்கத்தில் ஷாங்காயில் நடந்த கண்காட்சி ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கு ஜீ சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

இந்த ரோபாட்டானது 20 கிலோ எடையுடையது. பக்கவாதம் அல்லது முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளவர்களை நடப்பதற்கு உதவி செய்யும் எக்கோஸ்கிலிட்டன் ரோபாட் மாடலில், இண்டஸ்ட்ரியல் டிசைன் என்னும் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.   

இதே போன்ற செயல்பாடுகளுள்ள சந்தையில் கிடைக்கக் கூடிய இஸ்ரேல் மற்றும் ஜப்பானியத் தயாரிப்புகளை விட குறைந்த சந்தை விலையிலே இது கிடைப்பதற்கு எங்கள் நிறுவனம் முயற்சிகள் செய்து வருகிறது.

தற்போது இந்த ரோபாட்டின் பல்வேறு பணிகளான உட்காருதல்,நிற்றல்,நடத்தல் மற்றும் படிகள் ஏறுதல் ஆகியவற்றில் சோதனைகள் செய்து தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

சீனாவில் மொத்தமாக 80 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல் ஊனமுள்ளவர்கள் இருப்பதால் இத்தகைய ஒரு கருவியின் கண்டுபிடிப்பு அவர்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT