உலகம்

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் 352 பேர் பலி

DIN

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 352 பேர் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்சென்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
இராக் மற்றும் சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இதில், அப்பாவிப் பொதுமக்கள் 352 பேர் பலியாகினர்.
குறிப்பாக, நவம்பர் 2016 முதல் மார்ச் 9 2017 வரையில் நிகழ்த்தப்பட்ட கூட்டுப்படை தாக்குதல்களில் 45 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றுவதற்காக நடப்பு ஆண்டின் மார்ச் மாத தொடக்கத்தில் தனித்தனியாக மூன்று முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.
அதில், 45 பொதுமக்கள் பலியாகினர் என்றார் அவர்.
பொதுமக்கள் இறப்பு குறித்த பென்டகனின் இந்த அறிக்கையை மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் ஏராளமான பொதுமக்கள் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்களில் பலியாகியுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
"பயங்கரவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால், நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தபோதிலும் தாக்குதலின்போது பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்ப்பது கடினமாக உள்ளது' என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

SCROLL FOR NEXT