முகப்பு
உலகம்

வட கொரிய அதிபரை சந்திக்கத் தயார்: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை சந்தித்துப் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:25 PM
பகிர்:

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை சந்தித்துப் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புளூம்பர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்த்தும் வல்லமை வட கொரியாவுக்கு உள்ளது என்ற அந்த நாட்டின் மிரட்டல் அறிவிப்பு, கொரிய தீபகற்பப் பகுதியில் நிலவும் பதற்ற நிலை குறித்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வட கொரிய அதிபரை சந்திக்க வேண்டிய நிலை எழுந்தால் கட்டாயம் அவரை சந்தித்துப் பேசுவேன். அவரது சந்திப்பு பெருமை அளிக்கக் கூடியது. ஆனால் அதற்கான சரியான சந்தர்ப்பம் உருவாக வேண்டும். அவரை சந்திப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது என்றார் டிரம்ப்.
வட கொரியா தாக்குதல் நிகழ்த்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்கா கூறி வந்தாலும், தேவைப்பட்டால் அந்நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →