உலகம்

'ரஷிய தொடர்பு விசாரணை: அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை'

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவாக ரஷியா தலையிட்டதா என்று அறிவதற்காக நடத்தப்படும் விசாரணை எதிர்க்கட்சியினரின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறும் வகையில் அவருக்கு ரஷியா உதவி புரிந்தது என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். டிரம்ப் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், நீதித் துறை அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தலைவர் ஜேம்ஸ் கோமி அதனை மேற்பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த விசாரணையில் உதவி புரிய சிறப்பு விசாரணை அதிகாரியாக முன்னாள் எப்.பி.ஐ. தலைவர் ராபர்ட் முல்லரை நியமித்ததாக நீதித் துறை அறிவித்தது.
இது குறித்து டிரம்ப் கருத்து கூறுகையில், 'எனது வெற்றிக்குப் பின்னால் ரஷிய தலையீடு இருந்ததாகக் கூறப்படுவது அரசியல் சூழ்ச்சி. இப்போது சிறப்பு விசாரணை அதிகாரியாக முன்னாள் எப்.பி.ஐ. தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. இதுவரை எந்த அதிபருக்கும் நேராத கொடுமை இது. ஒபாமா அரசிலும், ஹிலாரி பிரசாரத்திலும் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க ஏன் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை? ஆனாலும் இந்த விசாரணை விரைந்து நடந்து முடிந்து உண்மை வெளிவர வேண்டும். ரஷியா தலையிடவில்லை என்ற உண்மை விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT