உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் டிவி சேனல் 

DIN

காபூல்: பெண்களால், பெண்களுக்காக ஒளிபரப்பபப்படும் புயி டிவி சேனல், ஆப்கானிஸ்தானில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல துறைகளில் இன்னும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், ஸான் டிவி (பெண்களுக்கான டிவி) கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பைத் தொடங்கியது.

இங்கு செய்தி வாசிக்கும் அனைவருமே பெண்கள், தயாரிப்பாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் என அனைவருமே பெண்களாக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல செய்தி சேனல்களில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் வருவார்கள். ஆனால், முதல் முறையாக, இந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே குறிப்பாக பெண்களுக்கானதாகவே அமைந்திருக்கும். இந்த நிகழ்ச்சிகளின் மூலம், பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வ ஏற்படுத்த முடியும் என்கிறார் 20 வயதாகும் டிவி சேனல் தயாரிப்பாளர் கதிரா அஹ்மாதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT