முகப்பு
உலகம்

இலங்கைக்குத் துணை நிற்போம்: பிரதமர் மோடி அறிவிப்பு

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேரைக் காணவில்லை. மேலும் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 மே, 2017 at 10:08 AM
பகிர்:

புது தில்லி: இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேரைக் காணவில்லை. மேலும் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மழை, வெள்ளத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்குத் துணை நிற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பலான ஐ.என்.எஸ்., கிர்ச் அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் கப்பல் இன்று காலையும் மற்றொரு கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இலங்கை மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.