முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 50 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் காபூலில் உள்ள ஈரான் நாட்டுத் தூதரகத்தை குறி வைத்து கார் மூலம் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குண்டு வெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், தூதரகத்தில் இருந்த அதிகாரிகள், அலுவலர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதியில் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →