முகப்பு
உலகம்

அமெரிக்கா - ஜப்பான் கடற்படைகள் தீவிர போர்ப் பயிற்சி

அமெரிக்கா - ஜப்பான் கடற்படைகளின் தீவிரப் போர்ப் பயிற்சி பசிபிக் பெருங்கடலில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
அமெரிக்க போர்க் கப்பல் தியோடோர் ரூஸ்வெல்ட்.
பகிர்:

அமெரிக்கா - ஜப்பான் கடற்படைகளின் தீவிரப் போர்ப் பயிற்சி பசிபிக் பெருங்கடலில் வியாழக்கிழமை தொடங்கியது.
அமெரிக்க கடற்படையின் பசிபிக் படைப் பிரிவுத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஜப்பான் கடற்படையுடன் இணைந்து அமெரிக்க கடற்படை மாபெரும் போர்ப் பயிற்சியைத் தொடங்கியது.
வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர்ப் பயிற்சி பத்து நாட்கள் நடைபெறும். இதில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க கடற்படையின் மாபெரும் விமானம் தாங்கிக் கப்பல்களான ரொனால்ட் ரீகன், தியோடோர் ரூஸ்வெல்ட், நிமிட்ஸ் ஆகியவற்றுடன், ஸ்டெதெம், சாஃபி, மஸ்டின் உள்ளிட்ட தாக்குதல் கப்பல்கள் இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்கின்றன. ஜப்பானின் ஒகினாவாவையொட்டிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் பத்து நாட்களுக்குப் போர்ப் பயிற்சிகள் நடைபெறும். யுத்தத்துக்கான தயார் நிலையில் இருக்கவும் இரு நாட்டுக் கடற்படைகளின் போர் நிர்வாக ஒருங்கிணைப்பு மேம்படவும் இந்தப் பயிற்சிகள் உதவும்.
நடுக்கடலில் போர்ப் பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக, போர் வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட திட்ட ரீதியிலான பயிற்சிகளை ஜப்பானின் ஒகினாவா கடற்படை தளத்தில் இரு நாட்டு மூத்த கடற்படை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக மேற்கொண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்கா - ஜப்பான் கடற்படைகளின் கூட்டுப் போர்ப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
தற்போதைய போர்ப் பயிற்சி தொடங்குவதற்கு முன்னர், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா கடற்படையினர் இணைந்து பசிபிக் பெருங்கடலில் போர்ப் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →