உலகம்

ஹபீஸ் சயீதை உடனடியாக கைது செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்

2008 மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை உடனடியாக கைது செய்யும்படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Raghavendran

மும்பையில் 2008-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பஞ்சாப் மாகாண நீதித்துறை மறுஆய்வு வாரியம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஹபீஸ் சயீத் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் அரசு போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

மேலும், அவனது வீட்டுக்காவலைத் தொடர வேண்டும் என்ற பாகிஸ்தான் அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததையும் அந்நாடு நினைவுகூர்ந்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் ஹஹீஸ் சயீதை உடனடியாக கைது செய்து அவன் மீதான பயங்கரவாத செயல்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT