உலகம்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

DIN


லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

58 பேர் பலியாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடையவும் காரணமாக இருந்த மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஸ்டீபன் பட்டோக், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று லாஸ் வேகாஸ் மாநகரக் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்த நிமிடம் வரை, கொலையாளி, ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

கணக்கராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்டீபன் பட்டோக், கடந்த வாரம் ஹோட்டல் அருகே நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது 32வது மாடியில் இருந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இதில் 58 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோருக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் அவனை சுற்றி வளைத்ததில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT