உலகம்

இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IANS

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு 'தெரிக்-இ-இன்சாப்' என்ற அரசியல் கட்சி ஒன்றினை துவக்கி தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 'தெரிக்-இ-இன்சாப்' கட்சியின் ஆரம்ப கட்டத் தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறியவருமான பாபர் என்பவர் தொடுத்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதின்றத்தில் முறையிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT