உலகம்

ஆப்கன் காவலர் பயிற்சி மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 47 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானின் கோஸ்த் நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்த் நகரில் காவலர் பயிற்சி மையம் அமைந்திருக்கிறது. அங்கு காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி காரை மோதச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மறைந்திருந்த பிற பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களையும் காவலர்களையும் நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 
இந்த தற்கொலைத தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலைத் தவிர, ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத் தலைநகரான கார்டேஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் குண்டு வீச்சிலும் ஈடுபட்டனர்.
மேலும், கஜினி பகுதியிலும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இந்த தாக்குதல்களில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தானின் பக்தியா மாகாணத்தையடுத்துள்ள குர்ரம் பழங்குடிப் பிரதேசத்தில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்தப் பகுதியையொட்டிய ஆப்கனின் கோஸ்த் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் 26 ஹக்கானி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
அமெரிக்க}கனடா வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினரை குர்ரம் பகுதியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் மீட்டது. ஹக்கானி பயங்கரவாதிகள் கடந்த 2012}ஆம் ஆண்டு கடத்திச் சென்ற அமெரிக்க குடும்பத்தினர் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். 
அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தபோதிலும், அடுத்த சில நாட்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT