உலகம்

மியான்மரில் பிரபல தேக்கு மர ஹோட்டல் தீயில் கருகி நாசம்

DIN

மியான்மரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேக்கு மர ஹோட்டல் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நாசமானது. இதில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 
இதுகுறித்துஅதிகாரிகள் தெரிவித்தாவது:
தலைநகர் யாங்கூனில் தேக்கு மரத்தால் ஆன கண்டவிகி பேலஸ் ஹோட்டல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஹோட்டலில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் குறித்து தகவல் இல்லை. தீ விபத்தையடுத்து அங்கு தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு யாங்கூனில் உள்ள மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால், மிகவும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட அந்த ஹோட்டல் கட்டடம் முற்றிலும் எரிந்து சாம்பலானது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரிக் கரையோôரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த கண்டவிகி பேலஸ் கடந்த 1930-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ராணுவ அதிகாரிகள் அந்த இடத்தை உல்லாச படகு போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT